Manjarahalli Village

மஞ்சாரஹள்ளி கிராமத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்

அடுத்த முறை தேர்தல் வந்தால், நீங்கள் வாக்களிக்க மறக்காதீர்கள். உங்கள் வாக்கு முக்கியம். அது நம்முடைய எதிர்காலத்தை உருவாக்க உதவும். வாக்களிக்கவும், மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்!
மஞ்சாரஹள்ளி கிராம மக்களே,

நான் மஞ்சாரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர், SAT டெக்னாலஜீஸ் மென்பொருள் நிறுவனம் மற்றும் கருணை கரம் அறக்கட்டளையின் நிறுவனர். நான் பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் சமூக ஆர்வலராக இருந்து வருகிறேன்.

இந்த கிராமத்தில் மாற்றம் தேவை என்று நான் நம்புகிறேன். நமது எதிர்கால சந்ததியினருக்காக நமது கிராமத்தை ஒரு சிறந்த இடமாக மாற்ற வேண்டும்.

அதனால்தான், வரப்போகும் பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தேன்.

நான் வெற்றி பெற்றால், இந்த கிராமத்தில் பின்வரும் மாற்றங்களை கொண்டு வர விரும்புகிறேன்:

கல்வி: நமது கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவேன்.
சுகாதாரம்: நமது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும். அதற்கு தேவையான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைப்பேன்.
கழிவு மேலாண்மை: நமது கிராமத்தில் உள்ள கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மேலாண்மை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.
வேலைவாய்ப்பு: நமது கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.
இந்த மாற்றங்களை கொண்டு வர நான் உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

நன்றி.

உங்கள்,

SATHEES

கருணை கரம் அறக்கட்டளை நிறுவனர்

தர்மத்தின் வழி நடப்போம் - நேர்மையை கடைப்பிடிப்போம்

1 ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காத மற்றும் வாங்காத கிராமத்தை உருவாக்குவோம் (நமது தேசத்திற்காக = மாற்றம் நம்மிடம் இருந்து) மாற்றம் என்னிடம் இருந்து:

பஞ்சாயத்து தலைவர் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளும் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செய்வேன்.

அனைத்தும் ஒளிவு மறைவு இன்றி பஞ்சாயத்து அலுவலக பலகையில் மாதம் ஒரு முறை விளக்கி அறிவிப்பு ஒட்டப்படும்.

வருடம் ஒரு முறை அந்த வருடம் என்ன செய்யப்பட்டது என்பதை அறிவிப்பு போட்டு அனைத்து மக்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும்.

இந்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்ற உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

இந்த வாக்குறுதிகள் நமது கிராமத்தை ஒரு சிறந்த இடமாக மாற்ற உதவும் என்று நம்புகிறேன். லஞ்சம் என்பது நம் நாட்டின் ஒரு பெரிய பிரச்சனையாகும். லஞ்சத்தை ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். இந்த வாக்குறுதிகள் லஞ்சத்தை ஒழிக்க ஒரு சிறிய முயற்சியாகும். நான் உங்களை உறுதியளிக்கிறேன், நான் வெற்றி பெற்றால், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நான் எனது முழு முயற்சியையும் செய்வேன்.

மக்களுக்காக / மக்களின் தேவைக்காக / நமது எதிர்காலத்திற்காக.

அனைத்து மக்களுக்கும்

அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வசதி.

அனைத்து கிராமங்களுக்கும் தனி தனி இடுகாடு.

அனைத்து பள்ளிகள் மற்றும் கோவில்களை முறையாக பராமரித்தல்.

அனைத்து கிராமங்களுக்கும் Solar Lights அமைத்து தரப்படும்.

10,00,000 மரக்கன்றுகள் நடுதல்.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல்

OAP/விதவை/திருமண/ஊனமுற்றோர் தொகை சுலபமாக கிடைக்க வழி வகை செய்யப்படும்.

அனைத்து பள்ளிகளுக்கும் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள்.

அனைத்து கிராமங்களுக்கும் முறையான சாக்கடை வசதி.

மாதம் ஒருமுறை அல்லது தேவைக்கேற்ப கொசுமருந்து அடித்தல்.

குடும்ப பெண்கள் சிறுதொழில் செய்வதற்கு பயிற்சியளித்தல்.

அனைத்து ஏரிகளையும் தூர்வாறுதல்.

தெருக்கூத்து கலைஞர்களுக்கு Pocket Mic & Speaker Connection Use பண்ணி அவங்களோட Voice அனைத்து மக்களுக்கும் கேக்க உதவி செய்தல்.

சுத்தம் மற்றும் சுகாதாரம் பாதுகாக்கப்படும்.

அனைத்து சீமை கருவேலம் மரங்களை அடியோடு அகற்றுதல்.

மஞ்சாரஹள்ளி கிராம வருமானத்தை அதிகப்படுத்துதல்.

1,00,000 பனை மரக்கன்றுகள் நடுதல்.

அனைத்து கிராமங்களுக்கும் முறையான சாலை வசதி.

ஊதுபத்தி மற்றும் துடைப்பம் உற்பத்தி செய்தல், Teddy Bear தொழில்சாலை அமைத்து குறைந்தது 50 முதல் 70 வரை குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருதல்.

மக்களின் வாழ்வாதாரம் மாடுகளை நம்பி இருப்பதால் மக்களுக்கு வழங்கப்படும் தீவனத்தின் அடிப்படை விலை 900-1000 வரை கிடைக்க வழிவகை செய்துதரப்படும்.

அரசாங்கத்தின் இலவச சலுகைகள்

அரசு வழங்கும் இலவசங்கள் அனைத்தையும் மக்களிடம் சேர்த்தல்.

வயது கடந்த முதியவர்களுக்கு, விதவை பெண்களுக்கு, உடல் நலிவுற்றோர்க்கு, ஆதரவற்றோர்க்கு இலவசமாக அரசு வழங்கும் பணத்தை பெற்று தருதல்.

அரசாங்கம் வழங்கும் இலவச வீடு யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களிடம் சேர்த்தல்.

நமது குழந்தைக்கு விளையாட்டு - அரசு ஒதுக்கீட்டு வாய்ப்புகளை உருவாக்குதல்

Volleyball, Cricket மற்றும் இதர விளையாட்டு மைதானம் அமைத்தல்.

மாணவர்களின் திறமையை கண்டறிந்து ஒலிம்பிக்ஸ் விளையாட்டிற்காக பயிற்சி அளித்தல் (Feature Target).

இளைஞர்களுக்கு உடல் பயிற்சிக்கூடம் (Gym).

மற்ற மாவட்டங்களில் நடக்கும் போட்டிகளுக்கு நமது திறமை மிகுந்த மாணவர்களை அனுப்புதல்.

நமது கிராமத்தில் மாதம் ஒரு முறை விளையாட்டு போட்டிகள் நடத்துதல்.

குழந்தைகளின் எதிர்காலத்திற்க்கான திட்டங்கள்

குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி Spoken English, Sports, Karate, Dance, Song பயிற்சியளித்தல்.

பள்ளி மாணவர்கள் தங்களின் எதிர்காலம் கருதி என்ன படிப்பு (Course) படிக்கலாம் என்று மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

குழந்தைகள் விளையாடுவதற்கு பூங்கா அமைத்தல்.

படித்த மாணவர்களுக்காக

சென்னை மற்றும் பெங்களூரில் Job Reference Arrange பண்ணலாம்.

3 மாதம் Final Year Internship இலவசமாக Support பண்ணலாம்.

Teacher Training, B.Ed படித்த மாணவர்களுக்கு Online Tuition எடுக்க வழி செய்யப்படும். (மாதம் குறைந்தது Rs.7,000 முதல் Rs.10,000 சம்பாதிக்கலாம். Maths, Physics, Chemistry - Tuition).

உங்களுக்கு சென்னை மற்றும் பெங்களூர் அல்லது மற்ற நகரங்களில் வேலை வாங்குவதற்கு தேவையான 1 அல்லது 2 மாதம் இலவசமாக பயிற்சி வழங்கப்படும்.

Resume எப்படி Prepare பண்றது, வேலை எப்படி தேடுவது, எங்க உங்க படிப்பிற்கு ஏற்ற வேலை இருக்குனு இலவசமாக வழிகாட்டப்படும்.

அரசு வேலை வாய்ப்பிற்கு பயிற்சி எடுத்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒரு முறை Training, வேலை வாங்கின மாணவர்கள் எப்படி படித்தார்கள் என்று Tips, எப்படி படிச்சா வேலை வாங்க முடியுமென்று Tips வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

மஞ்சாரஹள்ளி கிராம வருமானத்தை எப்படி அதிகப்படுத்துதல்

மாதம் ஒரு முறை விளையாட்டு போட்டிகள் நடத்தி அதிக மக்களை வரவழைத்தல்.(Cricket, kapadi, Running Race, Chess, Volley Ball, marathon, Etc..).

நம்மை சுற்றி இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி மஞ்சாரஹள்ளி கிராமத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுதல்.

நமது கோவில்களில் ஹோமம் மற்றும் பூஜை (Homam & Pooja) செய்து Online யில் மக்களுக்கு காட்டி குறைந்த பட்ச வருமானத்தை உருவாக்குதல்.

விவசாய மக்களுக்கு

மாட்டுத்தீவனம் குறைந்த விலையில் (Rs.900 முதல் Rs.1,000).

பூ தொழில் - ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் ஆனால் பலன் குறைவு, சிறந்த முறையில் யோசித்து மக்களின் கஷ்டத்தை போக்க முயற்சி எடுக்கப்படும் .

மாட்டுப்பால் - எப்படி நேரடியாக Tea Shop அல்லது Factory அல்லது மக்களுக்கு கொடுத்து குறைந்தபட்ச விலையை உயர்த்த முடியும் என்று பார்ப்போம்.

மக்களால் விளைவிக்கப்படும் பாகற்காய், பீர்க்கங்காய், புடலங்காய், தக்காளி இதை நேரடியாக மக்களிடம் சேர்க்க முயற்சி செய்வோம்.

விவசாய மக்களின் கண்ணீர் துடைப்போம்

விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு. அவர்கள்தான் நமது உணவை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால், அவர்கள்தான் நம் நாட்டில் மிகவும் ஏழ்மையானவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் ஆவார்கள்.

விவசாயிகளின் கண்ணீரை துடைக்க, நாம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:

  • விவசாயிகள் பெறுகின்ற விலையை உயர்த்த வேண்டும். விவசாயிகள் தங்கள் உழைப்புக்கு ஏற்ற விலையை பெறாததால், அவர்கள் நஷ்டத்தில் இயங்குகிறார்கள். விவசாயிகள் பெறுகின்ற விலையை உயர்த்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

  • விவசாயிகளுக்கு உரிய கடன் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு தேவையான நிதிக்காக வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள். ஆனால், வங்கிகள் கடன் வழங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தி, விவசாயிகளை சிரமப்படுத்துகின்றன. விவசாயிகளுக்கு உரிய கடன் வசதிகளை ஏற்படுத்தித் தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

 

  • விவசாயிகளுக்கு உரிய விவசாயக் கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்க வேண்டும். விவசாயிகள் தங்கள் விவசாயத்தை மேம்படுத்த, உரிய விவசாயக் கல்வி மற்றும் பயிற்சிகளை பெற வேண்டும். விவசாயிகளுக்கு உரிய விவசாயக் கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

  • விவசாயிகளுக்கு உரிய விவசாய உபகரணங்களை வழங்க வேண்டும். விவசாயிகள் தங்கள் விவசாயத்தை மேம்படுத்த, உரிய விவசாய உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு உரிய விவசாய உபகரணங்களை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

  • விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். விவசாயிகள் தங்கள் விவசாயத்தில் பணிபுரியும் போது, பல்வேறு ஆபத்துக்களுக்கு ஆளாகிறார்கள். விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இந்த நடவடிக்கைகளை எடுத்தால், விவசாயிகள் வாழ்க்கை மேம்படும். விவசாயிகள் கண்ணீர் துடைக்கப்படும்.

 

உங்கள் வாக்குறுதிகள் மிகவும் சிறந்தவை. நீங்கள் வெற்றி பெற்றால், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, நீங்கள் உறுதியுடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.

முயற்சி செய்வோம்

மேட்டூர் அணை தண்ணீரை எடுத்து நம்மை சுற்றியுள்ள சின்ன சின்ன அணைகள் மற்றும் ஏரிகளை நிரப்புதல்.

மேட்டூர் அணை தண்ணீரை எடுத்து மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்குதல்.

நான் மஞ்சாரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவன், SAT Technologies மென்பொருள் நிறுவனம் மற்றும் கருணை கரம் அறக்கட்டளையின் நிறுவனர். மஞ்சாரஹள்ளி கிராமத்தில் சமூக ஆர்வலன்.

வாருங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து முயற்சி செய்வோம்.

மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்!

ஒன்றாக இணைந்து முயற்சி செய்வோம்.

ஒற்றுமை பலம். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால், எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியும். நமது கிராமத்தை, நமது மாநிலத்தை, நமது நாட்டை ஒரு சிறந்த இடமாக மாற்ற, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முயற்சி செய்வோம்.
நம்முடைய செயல்களால், மாற்றத்தைக் கொண்டு வருவோம்.

மஞ்சாரஹள்ளி கிராமம்

கிராமக் குறியீடு

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவலின்படி மஞ்சாரஹள்ளி கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 643661.

மக்கள் தொகை

மஞ்சாரஹள்ளியின் மொத்த மக்கள் தொகை 6,997 ஆகும், இதில் ஆண்களின் எண்ணிக்கை 3,739 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,258 ஆகவும் உள்ளனர்.

கல்வியறிவு விகிதம்

மஞ்சாரஹள்ளி கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 50.39% இதில் 58.95% ஆண்களும் 40.58% பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

வீடுகள்

மஞ்சரஹள்ளி கிராமத்தில் சுமார் 1,758 வீடுகள் உள்ளன.

பின்கோடு

மஞ்சாரஹள்ளி கிராமத்தின் பின்கோடு 636810.

கிராமத்தின் பொருளாதாரம்

மஞ்சாரஹள்ளி கிராமத்தின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு நெல், கரும்பு, பருப்பு வகைகள், காய்கறிகள் போன்றவை பயிரிடப்படுகின்றன. இக்கிராமத்தில் சில தொழிற்சாலைகளும் உள்ளன.

கிராமத்தின் கல்வி நிலை

மஞ்சாரஹள்ளி கிராமத்தில் ஒரு அரசு தொடக்கப் பள்ளி, ஒரு அரசு நடுநிலைப் பள்ளி, ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி, ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் உள்ளன.

கிராமத்தின் சுகாதார நிலை

மஞ்சாரஹள்ளி கிராமத்தில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

கிராமத்தின் போக்குவரத்து

மஞ்சாரஹள்ளி கிராமம் தேசிய நெடுஞ்சாலை 44-ன் அருகில் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு பேருந்து வசதி உள்ளது.

மஞ்சாரஹள்ளி கிராமம் ஒரு சிறந்த கிராமமாகும். இக்கிராமத்தில் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

Latest News & Update

குறைந்த விலையில் மாட்டுத்தீவனம்: Rs.900 முதல் Rs.1000.

10,00,000 மரக்கன்றுகள் நடுதல்.

அனைத்து பள்ளிகளுக்கும் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி.

Become a Volunteer

மஞ்சாரஹள்ளி கிராமம் ஒரு சிறந்த கிராமமாகும். இக்கிராமத்தில் வாழ்க்கைத் தரம் மேலும் மேம்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்காக நான் விரும்பும் சில விஷயங்கள் இங்கே:

கல்வி: நமது கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

சுகாதாரம்: நமது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும். அதற்கு தேவையான ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும்.

கழிவு மேலாண்மை: நமது கிராமத்தில் உள்ள கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மேலாண்மை செய்ய வேண்டும். அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

வேலைவாய்ப்பு: நமது கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அதற்கு தேவையான தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

விவசாயம்: நமது கிராமத்தின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். விவசாயிகள் லாபகரமாக விவசாயம் செய்ய உதவ வேண்டும். அதற்கு தேவையான விவசாய உதவிகளை வழங்க வேண்டும்.

இந்த விஷயங்கள் நடந்தால், நமது கிராமம் ஒரு சிறந்த இடமாக மாறும் என்று நம்புகிறேன்.

WhatsApp Now :

Type பண்ணி அனுப்புங்க or Voice Message அனுப்புங்க.

About Manjarahalli Village

Manjarahalli village is in Pennagaram (Tk)), Dharmapuri District, Tamil Nadu State, India. It is 44 kilometres west of Dharmapuri’s district headquarters. Pennagaram is 22 kilometres away. 336 kilometres from Chennai, the state capital.

It is situated 30 km from the sub-district headquarters at Pennagaram (the tehsildar office) and 60 km from the district headquarters at Dharmapuri. As per 2009 statistics, Manjarahalli village is also a gramme panchayat.

The total geographical area of the village is 3750.27 hectares. Manjarahalli has a total population of 6,997, of which the male population is 3,739 and the female population is 3,258. The literacy rate of Manjarahalli village is 50.39%, out of which 58.95% of males and 40.58% of females are literate. There are about 1,758 houses in Manjarahalli village. The pincode of Manjarahalli village locality is 636810.

Manjarahalli’s pin code is 636810, and the postal head office is Pennagaram.

Manjarahalli Village Nearby location:

Gendenahalli (8.5 KM), Perumbalai (10 KM), Nagamarai (11 KM), Donnakuttahalli (13 KM), and Kodihalli (16 KM) are the nearby villages to Manjarahalli.

Manjarahalli is bounded on the west by Kolathur Block, on the north by Pennagaram Block, on the south by Nangavalli Block, and on the east by Kadaiyampatty Block.

Population of Manjarahalli Village

ParticularsTotalMaleFemale
Total Population6,9973,7393,258
Literate Population 3,526 2,204 1,322
Illiterate Population 3,471 1,535 1,936

Manjarahalli Village Overview

ParticularsTotal
Gram Panchayat Manjarahalli
Block / TalukaPennagaram
DistrictDharmapuri
StateTamil Nadu
Pincode 636810
Area3750.27 hectares
Population6,997
Households1,758
Nearest Town Pennagaram