Manjarahalli Village

தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமசபை கூட்டங்கள்.. புகார் வந்தால் அதிகாரம் பறிப்பு – அரசு எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் தனி பிரிவு – எண் : 044 25672345, 044 25672283, 9443146857 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கிராமங்களின் ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது. வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் கிராம சபை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அதிகாரம் பறிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் தனி பிரிவு – எண் : 044 25672345, 044 25672283, 9443146857 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டங்கள்

கிராம சபை கூட்டங்கள் ஆண்டுதோறும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கூட்டப்பட்டு வருகிறது.

முக்கிய அறிவுரை

கிராம சபைக் கூட்டங்கள் காலை 11 மணியளவில் நடைபெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது. இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

தலைமை செயலர் இறையன்பு

கிராம சபை கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு

1.  கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும். 2020 – 2021 மற்றும் 2021- 2022 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

நடக்கவில்லை என்றால் புகார்

2. 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 பேருக்கு மேல் கலந்து வேண்டும். குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உரிமை உண்டு.

3. 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். கிராமத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

4. உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை தகவல் தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு.

கடும் நடவடிக்கை

5. கிராம சபை கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

6. ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்டியே கிராம சபை தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும் ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

7. தமிழக அரசு கிராம சபை கூட்டம் தெரிவித்தும், நடத்தாத ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் அளிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கவும்.

அதிகாரம் பறிக்கப்படும்

8. மாவட்ட ஆட்சியரிடம் கிராம சபை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அதிகாரம் பறிக்கப்படும்.

9. கிராம மக்கள் சொல்லும் தீர்மானம் பஞ்சாயத்து தலைவரும் அதிகாரியோ நிராகரிக்க முடியாது. தீர்மானம் சரி அல்லது தவறு முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இதனை அறிந்து செயல்பட வேண்டும்.

10. கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை என்றால் உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலமைச்சர் தனி பிரிவு – எண் : 044 25672345, 044 25672283, 9443146857 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Study more details : https://www.manjarahallivillage.com/

நன்றி!🙏😊

உங்கள் நண்பர்,

சதீஸ்குமார் K

உங்கள் வருங்கால மஞ்சாரஹள்ளி பஞ்சாயத்து தலைவருக்கான வேட்பாளர்!!!

மாற்றத்திற்காக காத்திருந்த உங்களில் ஒருவன் இப்போழுது உங்களுக்காக நமது எதிர்கால சந்ததியினருக்காக வரப்போகும் பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் (Manjarahalli President) பதவிக்கு மாற்றத்தை எதிர்பார்த்து போட்டியிடும் உங்கள் நான்.

தர்மத்தின் வழி நடப்போம் - நேர்மையை கடைப்பிடிப்போம்

1 ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காத மற்றும் வாங்காத கிராமத்தை உருவாக்குவோம்
(நமது தேசத்திற்காக = மாற்றம் நம்மிடம் இருந்து).

மாற்றம் என்னிடம் இருந்து: பஞ்சாயத்து தலைவர் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளும் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செய்வேன்.

அனைத்தும் ஒளிவு மறைவு இன்றி பஞ்சாயத்து அலுவலக பலகையில் (Office Board) மாதம் ஒரு முறை விளக்கி அறிவிப்பு (Notice) ஒட்டப்படும்.

வருடம் ஒரு முறை அந்த வருடம் என்ன செய்யப்பட்டது என்பதை அறிவிப்பு (Notice) போட்டு அனைத்து மக்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும்.